அணில் கபூர் முதல் பிரியங்கா சோப்ரா வரை, தென்னிந்தியப் படங்களில் அறிமுகமாகிய 9 நடிகர்கள்

அணில் கபூர் முதல் பிரியங்கா சோப்ரா வரை, தென்னிந்தியப் படங்களில் அறிமுகமாகிய 9 நடிகர்கள்

பிரியங்கா சோப்ரா ஜோனஸ்

க்ரிஷ், டான் போன்ற ஹிந்தி படங்கள் மற்றும் பேவாட்ச், சிட்டாடெல் போன்ற ஹாலிவுட் தொடர்களில் நடித்திருந்தாலும், 2000 ஆவது ஆண்டு உலக அழகிப் பட்டத்தை வென்ற பிறகு பிரியங்கா சோப்ரா அறிமுகமாகியது தளபதி விஜய் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழன் திரைப்படத்தில் தான்.

ஐஸ்வர்யா ராய் பச்சன் 

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அப்பளாஸ்களை அள்ளிய ஐஸ்வர்யா ராயின் தமிழ் சினிமாவுடனான உறவு பல ஆண்டுகள் முன்னிருந்தே தொடங்கியது. 1994ஆம் ஆண்டு உலக அழகிப் பட்டத்தை வென்ற கையோடு, மணிரத்னம் இயக்கத்தில் இருவர் (1997) திரைப்படத்தில் நடித்தார்.

தீபிகா படுகோண்

ஓம் சாந்தி ஓம் படத்தின் கனவுத் துவக்கத்திற்குப் பிறகு தீபிகா தொடர்ச்சியாக ஹிட்களைக் கொடுத்து நட்சத்திரப் படிகளை ஏறினார். ஆனால் அவரது அறிமுகம் உபேந்திரா உடன் ஐஸ்வர்யா (2006) என்ற கன்னட படத்தில் அரங்கேறியது. அந்த படம் அந்த வருடத்தின் டாப் 5 ஹிட்களில் ஒன்றாக அமைந்தது.

மாதவன் 

ரெஹனா ஹே தேரே தில் மெயின் படத்திற்கு பிறகு தேசிய அளவில் இதயங்களைக் கொள்ளைக் கொண்ட மாதவன் அடிப்படையில் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர். தென்னிந்திய திரையுலகில் இன்றும் இவர் நட்சத்திரமாக ஜொலிக்கிறார். இவரது அறிமுகம் சாந்தி சாந்தி சாந்தி என்கிற கன்னட படமாகும். இதன் பிறகு அலைபாயுதே மூலம் தமிழில் அறிமுகமாகி மக்கள் மனங்களை வென்றார்.

க்ரித்தி சனோன்

ஹிந்தியில் ஹீரோபந்தி படத்தில் டைகர் செராஃப் உடன் அறிமுகமானது முதல் ஆதிபுருஷில் சீதாவாக நடித்தது வரை,  க்ரித்தி சனோன் தனது திரையுலகப் பயணத்தில் நெடுந்தூரம் கடந்து வந்திருக்கிறார். இவரது அறிமுக திரைப்படம் தெலுங்கில் சுகுமாரின் சைக்கலாஜிக்கல் த்ரில்லரான 1: நேனொக்கடினே ஆகும். இதில் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்தார்.

Related Stories

No stories found.
www.filmcompanion.in